கூட்டணி ஆட்சி ஒத்துவராது: கருத்துக் கணிப்பு
சென்னை:தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என தினகரன், ஏசி நீல்சன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் கூட்டணி கட்சிக்கு மக்களிடையே முன்பை விட ஆதரவு அதிகரித்துள்ளும் தெரிய வந்துள்ளது.
தினகரன் நாளிதழும், ஏசி நீல்சன் அமைப்பும் இணைந்து தொடர் கருத்துக் கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்திற்குக் கூட்டணி ஆட்சி நல்லதா என்பது குறித்து எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 63 சதவீதம் பேர் தனிக் கட்சி ஆட்சியே சிறந்தது என்று தெரிவித்துள்ளனர். 33 சதவீதம் பேர் கூட்டணி ஆட்சியே சிறந்தது என்று கூறியுள்ளனர். 4 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் சென்னை நகர மக்களிடையே கூட்டணி ஆட்சிக்கு சற்றே ஆதரவு அதிகரித்துள்ளது. அதாவது 38 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். 62 சதவீதம் பேர் தனிக் கட்சி ஆட்சியே சிறந்தது என்று கூறியுள்ளனர்.
கோவை, நெல்லை மாவட்ட மக்கள் தனிக் கட்சி ஆட்சியே சிறந்தது என்று தெரிவித்துள்ளனர். கோவையில் 77 சதவீதம் பேரும், நெல்லையில், 71 சதவீதம் பேரும் தனிக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், புதுச்சேரி, நாகர்கோவிலில் கூட்டணி ஆட்சிக்கு நல்ல ஆதரவு காணப்படுகிறது. தலா 41 சதவீதம் பேர் கூட்டணி ஆட்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
சென்னையில் 38 சதவீதம் பேரும், மதுரையில் 34 சதவீதம் பேரும் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவையில்தான் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அதிகம் இல்லை.
தனிக் கட்சி ஆட்சிக்கான ஆதரவு தெரிவித்தவர்கள் அதுகுறித்துக் கூறுகையில், சுதந்திரமாக செயல்பட, நிர்ப்பந்தம் இல்லாமல் செயல்பட தனிக் கட்சி ஆட்சிதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூறுகையில், கூட்டணி ஆட்சி என்றால் எந்தக் கட்சியினர் தவறு செய்தாலும் மற்ற கட்சியினர் தட்டிக் கேட்கலாம், கண்டிக்கலாம், இதன் மூலம் தவறுகளைக் குறைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications