ஸ்ரீதர் வாண்டையார் ஜாமீனில் விடுதலை
சீர்காழி: மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட 56 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதாகவும், காரில் ஆயுதங்களுடன் வந்ததாகவும் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து சிறையில் வாண்டையார் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டிக் கேட்டுக் கொண்டதால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
இந்த நிலையில் வாண்டையார் மற்றும் கைது செய்யப்பபட்ட மூமுகவினர் 56 பேர் சார்பில் ஜாமீன் கோரி சீர்காழி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனைவரும் சிதம்பரம் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார்.
இதையடுத்து வாண்டையார் உள்ளிட்டோர் திருச்சி மத்திய சிறையிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications