நெல்லை, குமரி கல்வி நிறுவனங்களில்ரெய்டு: பல கோடி வரி ஏய்ப்பு!
திருநெல்வேலி:நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான கல்லூரிகள் உள்பட 19 இடங்களில் அதிரடி வருமான வரி சோதனை நடந்தது. இதில் பல கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. பல லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு இயக்குநர் சுரேஷ் கப்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் இரு அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் பெருமளவு வரி முறைகேடு நடப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து அந்தக் கல்லூரிகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மொத்தம் 19 இடங்களில் சோதனை நடந்தது. இதில் 150 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மே 4ம் தேதி காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு இந்த சோதனை முடிவடைந்தது.
முதல் சோதனை நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்ட படநிலம் நல அறக்கட்டளைக்குச் சொந்தமான, குலசேகரத்தில் இயங்கி வரும் மூகாம்பிகை மருத்துவ அறிவியல் கழகம், பல் மற்றும் நர்சிங் கல்லூரிகளில் நடந்தது.
இந்த சோதனையில், கடந்த 6 ஆண்டுகளாக ரூ. 20 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர அந்த அறக்கட்டளையின் நிர்வாகிகள் ரூ. 26 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.
சோதனையின்போது ரூ. 13.5 லட்சம் ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்த அறக்கட்டளையை டாக்டர் வேலாயுதன் நாயர் என்பவர் நடத்தி வருகிறார். இவர் ஆரம்பத்தில் சாதாரண ஒரு கிளினிக்கை மட்டும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல இன்னொரு கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான பிடியூர் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்தக் கல்லூரியின் தாளாளர் சுயம்புவின் நாகர்கோவில் இல்லத்திலும் சோதனை நடந்தது.
இந்த அறக்கட்டளைக்கு நிதியாக வந்த பணத்திற்கு முறையான ரசீதுகள் இல்லை. கணக்குகளும் சரிவர பராமரிக்கப்படவில்லை. இந்த நிறுவனத்தில் நடத்தி வரும் ஜவுளிக் கடையில் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள துணிகளுக்கு கணக்கு இல்லை என்று கப்ரா தெரிவித்துள்ளார்.
-
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு












Click it and Unblock the Notifications