அண்ணா சிலைக்கு அவமதிப்பு-முதியவர் கைது
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அண்ணா சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்து அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மூடை தூக்கும் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
பெரியார், பிள்ளையார் உள்ளிட்டவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவை நிறுவியவருமான அண்ணாவின் சிலையையும் விஷமிகள் அவமதிக்கத் தொடங்கியுள்ளனர்.
குமாரபாளையம் சுற்றுலா மாளிகை முன்பு அண்ணா சிலை உள்ளது. கடந்த 1969ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
அந்த சிலைக்கு நேற்று நெற்றியில் விபூதி, குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திமுக சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டது.
வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், ராஜு என்ற 60 வயது முதியவர்தான் இந்த செயலைச் செய்தது என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்தனர்.
அண்ணா மீது கொண்ட பற்றால்தான் இவ்வாறு செய்ததாகவும், அவமதிக்கும் நோக்கில் தான் இவ்வாறு செய்யவில்லை என்றும் அந்த முதியவர் போலீஸாரிடம் தெரிவித்தார். ராஜூ ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications