வீட்டிலிருந்தபடியே பஸ்ஸை பாலோ செய்யலாம்
சென்னை:சென்னை நகரில் ஓடும் அரசுப் பேருந்துகள் எந்த இடத்தில் வந்து கொண்டுள்ளது என்பதை வீட்டிலிருந்தபடியே அறிந்து கொள்ளும் நவீன வசதியை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் வாகனங்களின் நடமாட்டத்தை செயற்கைக்கோள் மூலம் அறியும் வசதி பல தனியார் வாகனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சரக்கு லாரிகள், தனியார் பேருந்துகளில் இந்த வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வசதி சென்னை மாநகரப் பேருந்துகளில் அமல்படுத்தப்படவுள்ளது.
மத்திய அரசின் ரூ.3 கோடி நிதியுதவியுடன் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 2000 பேருந்துகளில் இது அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி அனைத்துப் பேருந்துகளிலும் சென்சார் கருவிகள் பொருத்தப்படும். பின்னர் இவை செயற்கைக்கோள் மூலமாக போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட பேருந்து எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பது கட்டுப்பாட்டு அறையில் உள்ள கம்ப்யூட்டர்கள் மூலம் கண்காணிக்க முடியும். மேலும் சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநருடன் பேசுவதற்கான வசதியும் இதில் உள்ளது.
பேருந்துகளின் நடமாட்டம் குறித்த தகவல்கள் இணையதளத்திலும் இடம் பெறச் செய்யப்படும். அதன் மூலம் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்தே தாங்கள் போக வேண்டிய பேருந்து தற்போது எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய முடியும். அதை வைத்து தங்களது பயண நேரத்தை திட்டமிட முடியும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!











Click it and Unblock the Notifications