குஜராத் போலி என்கவுண்டர்-நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு
டெல்லி:குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் விவகாரம் குறித்து பேச காங்கிரஸ் எம்பிக்கள் முயன்றபோது பாஜக அமளியில் ஈடுபட்டது. இதனால் பெரும் கூச்சல், குழுப்பம் ஏற்பட்டதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
குஜராத் போலி என்கவுண்டர் தொடர்ந்து இன்றும் நாடாளுமன்றத்தைக் கலக்கியது.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாஜக எம்பிக்கள் காஷ்மீர் விவகாரத்தைக் கிளப்பினர்.
தீவிரவாதிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பது குறித்த பிரச்சனை தொடர்பாக அவர்கள் பேச முயன்றனர்.
ஆனால் ஆளும் காங்கிரஸ் கட்சி முதலில் குஜராத் போலி என்கவுண்டர் கூறித்து விவாதிக்க வேண்டும் என கோரியது.
இதனால் மக்களவையில் கூச்சலும், குழுப்பமும் ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி முயற்சித்தார். ஆனால் அமளி குறையவில்லை. இதையடுத்து ஒரு மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து மீண்டும் சபை கூடியது அப்போது எதிர்கட்சி தலைவர் ஜஸ்வந்த் சிங் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச முயன்றர்.
அப்போது காங்கிரஸ் கட்சியினர் முதலில் குஜராத் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், குஜராத் முதல் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications