பெரியாறு அணை கைப்பிடிச்சுவர் மீண்டும் சேதம்!:கேரளாவின் உள்குத்து!!
கூடலூர்:பெரியாறு அணையின் கைப்பிடிச்சுவர் 15 அடி நீளத்துக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு மறுத்த வருகிறது.
மேலும் அணை பலவீனமாக இருப்பதாக கூறி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிபுணர் குழுவை அழைத்து வந்து அணைப்பகுதியில் அடிக்கடி கேரள அரசு செய்து வருகிறது. அப்போதெல்லாம் தமிழக அதிகாாிகளை மிரட்டுவதையும் மலையாளிகள் ஒரு வேலையாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த வாரம் பெரியாறு அணைக்கு நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்தது. இதற்கு பதில் நடவடிக்கையாக கேரள அணைகள் பாதுகாப்பு குழுவின் தலைவர் சசிதரன் தலைமையிலான குழு ஒன்று நேற்று முன்தினம் அணைக்கு சென்று பார்வையிட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அணையின் கைப்பிடி சுவர் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அணை பலவீனமாக உள்ளதாக வெளியுலகுக்குக் காட்ட கேரளாவே இந்த அசிங்க வேலையை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரியாறு அணையின் கைப்பிடிச்சுவர் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியாறு அணைப்பகுதி முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்த போதும், பாதுகாப்பு பணியில் கேரளா போலீசார் 30 பேர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் கைப்பிடிச்சுவர் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பின் கடந்த 6 மாதங்களாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும், கேரள போலீசாரும் அணைப் பகுதிக்குள் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் அணையின் கைப்பிடிச் சுவர் திடீரென 15 அடி நீளம், 2 அடி அகலத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கேரள அணை பாதுகாப்பு குழுவினர் நேற்று முன்தினம் அணைக்கு சென்று வந்த பிறகு இது நடைபெற்றுள்ளதால். இதை கேரள போலீசாரே செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் அணை பலமிழந்து விட்டதாக பிரசாரம் செய்து, தமிழகத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்த கேரளம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications