அமெரிக்க தம்பதிக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் விவாகரத்து-இமெயிலில் ஜட்ஜ்மென்ட்!
சென்னை:அமெரிக்காவில் வாழும் தம்பதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விவாகரத்து வழங்கி, இ-மெயில் மூலம் தீர்ப்பு நகலையும் அனுப்பி வைத்தது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். அவரது மனைவி சாந்தி. இருவரும் அமெரிக்காவில் வேறு வேறு நிறுவனங்களில் சாப்ட்வேர் என்ஜீனியர்களாக உள்ளனர்.
திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி தேவதாஸ் விசாரித்தார். சில முறை இருவரும் விசாரணைக்கு நேரில் வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் வரவில்லை. அமெரிக்காவில் இருப்பதால் இருவரும் நேரில் ஆஜராக முடியவில்லை, எனவே வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என அவர்களது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்ற நீதிபதி தேவதாஸ், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தினார். இருவரிடமும் அவர்களுடைய இறுதிக் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பின் நகலை இமெயில் மூலம் இருவருக்கும் உடனடியாக அனுப்பி வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர்












Click it and Unblock the Notifications