மத வெறி சிடி: பாஜக மன்னிப்பு கேட்க தேர்தல் ஆணையம் கெடு!
டெல்லி: மதவெறியை தூண்டும் வகையில் பிரசார சிடியை வெளியிட்டதற்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவுக்கு தேர்தல் கமிஷன் கெடு கொடுத்துள்ளது.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் பிரசார சிடி வெளியிடப்பட்டது. இந்த சிடியில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் இந்து போல் சென்று பசுமாட்டை விலைக்கு வாங்கி அதை இறைச்சி கடைக்கு அனுப்பி வைப்பது போலவும், இன்னொரு முஸ்லிம் இளைஞர் இந்து போல நடித்து இந்து பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்ய முயற்சிப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சிடி உ.பி முஸ்லீம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு அனைத்துக் கட்சிகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதில், மத உணர்வை தூண்டும் பாஜகவை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த குற்றச்சாட்டினை பாஜக மறுத்தது. தலைமைக்குத் தெரியாமல் தங்கள் கட்சியினர் இதுபோன்ற சிடியை தயாரித்து வெளியிட்டு விட்டதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தது.
இது தொடர்பான தேர்தல் கமிஷன் விசாரணையில் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா இடம் பெறக்கூடாது என்றும் பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதை தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை.
இந்த நிலையில் சிடி வெளியிட்ட பிரச்சனையில் பாஜக இன்னும் ஒரு வாரத்திற்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தேர்தல் கமிஷன் கெடு விதித்துள்ளது.
-
Annamalai Delhi Trip LIVE: தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!










Click it and Unblock the Notifications