அழகிரி ரெளடி-சன் டிவி கடும் தாக்கு:அன்று ஒரு நீதி, இன்று ஒரு நீதி
சென்னை:மதுரையில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதல்களை சன் டிவி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஆனால் இதே அழகிரியின் ஆதரவாளர்கள் முன்பு ஒருமுறை மதுரையில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டபோது அதை சன் டிவி சுத்தமாக காட்டாமல் மறைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
அழகிரி, ஸ்டாலின் மோதல் திமுகவினர் மட்டுமல்ல தமிழக மக்களும் நன்கறிவர். இருவரது ஆதரவாளர்களும் அவ்வப்போது மோதிக் கொள்வர், மிகக் கடுமையான வாக்குவாதங்களும் நடக்கும். பலமுறை மதுரையில் பெரும் அடிதடியும் நடந்துள்ளது.
அந்த சமயங்களில் எல்லாம் சன் டிவியில் இதுகுறித்து பெரிதாக செய்திகள் எதுவும் இடம் பெற்றதில்லை.
இந் நிலையில் சன் டிவி அலுவலகத்தை அழகிரி ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கி சன் டிவி நிர்வாகத்துக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.
இது சன் டிவியின் இன்றைய பிற்பகல் செய்தியில் எதிரொலித்தது. வழக்கமாக 1.30 மணிக்கு ஒளிபரப்பாக வேண்டிய செய்தி, பத்து நிமிடங்கள் தாமதமாகத்தான் ஒளிபரப்பானது.
முதல் செய்தியே அழகிரி செய்திதான். இதுவரை இல்லாத அளவுக்கு அழகிரி குறித்து செய்தியில் கடுமையாக குறிப்பிட்டனர்.
அழகிரியின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி மதுரை மக்கள் தவிப்பதாகவும், மதுரை நகரம் ஸ்தம்பித்துள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டது.
அதைவிட மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதனை, அழகிரியின் ரவுடி என்று கடுமையாக குறிப்பிட்டனர். முதல்வரின் மூத்த மகன் அழகிரியை, முதல் முறையாக சன் டிவி மிகக் கடுமையாக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு ஒருமுறை மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் மிகப் பெரும் வன்முறையில் குதித்தனர். அப்போது நூற்றுக்கணக்கான பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. மக்கள் பீதியடைந்து பயப்படும் நிலை காணப்பட்டது.
ஆனால் அதுகுறித்து சன் டிவியில் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.
ஆனால் இப்போது சன் டிவி, தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட செய்தியை மிக தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது சன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications