வைகோ செய்த பெரும் தவறு என்ன?
திருசெந்தூர்:மதிமுக தொடங்கப்பட்டு, கடந்த 13 ஆண்டுகளில் திமுகவுடன் கூட்டணி வைத்ததுதான் நான் செய்த பெரிய தவறு என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுகவின் 14வது ஆண்டு தொடக்கவிழா மாநாடு திருச்செந்தூரில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர்,
ஆயிரக்கணக்கான புலவர்களால் பாடப் பெற்ற திருசெந்தூரில் மதிமுக மாநாடு நடப்பது பொருத்தமாக உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக நம்மை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த மாநாடு ஒரு பாடமாக அமையும்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது எம்ஜிஆரையும், என்னை திமுகவை விட்டு தூக்கி எறிந்ததற்கான காரணங்களை கூறினார். ஆனால் எம்ஜிஆரோடு என்னை ஒப்பிட முடியாது.
கடந்த 13 ஆண்டுகளில் 1999 மற்றும் 2004 ஆண்டுகளில் திமுகவுடன் கூட்டணி வைத்துதான் நான் செய்த பெரிய தவறு. கூட்டணியில் இருக்கும்போதே அழிக்க நினைத்தனர்.
ஆனால் அதிமுக பொதுசெயலாளர் சகோதரி ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு 35 இடங்கள் கொடுத்து வெற்றி பெற வாழ்த்தினார். தஞ்சையில் நடந்த மதிமுக தொடக்கவிழா மாநாட்டிற்கு ஜெயலலிதா வாழ்த்து கூறினார். எங்களது வளர்ச்சிக்கு அதிமுக உற்ற தோழனாக இருந்து வருகிறது.
கட்சியின் வளர்ச்சிக்கு தொண்டன் தான் முதுகெலும்பு, அப்படிபட்ட தொண்டனை கொண்ட இயக்கமாக மதிமுக விளங்குகிறது.
விரைவில் மத்தியில் ஆட்சி மாறும், மாநிலத்தில் தேர்தல் வரும்.
மதுரை கலவரம் குறித்து அவர் பேசுகையில் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க குண்டர் கூட்டம் தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்கியுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையை தன் வசம் வைத்துள்ள்ள முதல்வர் கருணாநிதி இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
விஷமத்தனமான கருத்துக் கணிப்பை வெளியிட்டு கலவரத்திற்குத் தூண்டுகோலாக இருந்த தினகரன் நாளிதழ் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து கருணாநிதி உடனடியாக விலக வேண்டும் என்றார் வைகோ.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications