கொள்ளிடம்: ஆற்றில் மூழ்கி நான்கு பேர் சாவு
கும்பகோணம்:கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை போரூரில் மளிகைக் கடை வைத்திருப்பவர் பெருமாள். இவரும், இவரது உறவினர்கள் 13 பேரும் வேன் மூலம் கும்பகோணம் அடுத்து உள்ள பட்டீஸ்வரத்திற்கு சாமி கும்பிட சென்றனர்.
நேற்று காலை 6 மணியளவில் அணைக்கரை பாலம் அருகே சென்றபோது, கொள்ளிடம் ஆற்றில் குளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து வேன் சாலையோரம் நிறுத்தப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றின் கீழ்க்கரைப் பகுதி சற்று ஆழம் கொண்டது. இதை அறியாத அவர்கள் அந்தப் பகுதியில் குளிக்கச் சென்றனர். சிறுவர்களும், பெரியவர்களுமாக ஆற்றில் இறங்கியுள்ளனர்.
அப்போது தண்ணீரில் இறங்கிய 6 பேர் நீரில் மூழ்கத் தொடங்கினர். இதைக் கண்ட பெருமாள் தண்ணீரில் இறங்கி அவர்களைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் நீரில் மூழ்கத் தொடங்கினார்.
இதையடுத்து அவர்கள் போட்ட சப்தத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். நீரில் மூழ்கிக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றத் தொடங்கினர்.
ஆனால் சிறுவன் ரவிசங்கர் மற்றும் சங்கீதா ஆகியோரை மட்டுமே உயிரோடு மீட்க முடிந்தது. பெருமாள் (65), திணேஷ்குமார் (10), ஜெயஸ்ரீ (12), சதீஷ் (12) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications