வன்முறை வரும் என்று தெரிந்தும்அழகிரியை கைது செய்யாதது ஏன்: ஜெ.
சென்னை:கருத்துக் கணிப்பால் பெரும் வன்முறை வரும் என்று எனக்கு முன்பே தெரியும் என கூறும் முதல்வர் கருணாநிதி, அப்படியானால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏன் மு.க.அழகிரியைக் கைது செய்யவில்லை என்று கேட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தினகரன் கருத்துக் கணிப்பால் இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தனது பேச்சைக் கூட கேட்காமல் கருத்துக் கணிப்பை வெளியிட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதை விட மோசமாக, கேவலமாக ஒரு முதல்வரால் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்க முடியாது.
அழகிரியால் வன்முறை மூளும் எனத் தெரிந்திருந்தும் ஏன் அவரையும், அவரது கூட்டாளிகளையும் முன்னெச்சரிக்கையாக முதல்வர் கைது செய்யவில்லை. 3 உயிர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பணத்தைக் கொடுத்து விட்டால் எல்லாம் தீர்ந்து போய் விடுமா.
வாரிசுரிமைப் போரில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து இழப்பீடு தருவது தகுமா. இத்தனை நடந்த போதிலும், எம்.எல்.ஏக்களுக்கு 5 நட்சத்திர ஹோட்டலில், விருந்து கொடுத்துள்ளார் கருணாநிதி. எவ்வளவு கொடூர குணம் இருந்தால் இப்படி நடந்து கொண்டிருப்பார்.
மதுரை சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரியிருப்பது கேலிக்கூத்தானது. மத்தியில் அனைத்து வகையிலும் அதிகாரத்தைக் கொண்டுள்ள கருணாநிதியின் மனப்போக்கின்படிதான் சிபிஐ விசாரணை நடைபெறும்.
குவாத்ரோச்சியைக் காப்பாற்றி தப்பிக்க விட்டதைப் போல மதுரை சம்பவத்திலும் குற்றவாளிகளைத் தப்ப வைத்து விடுவார் கருணாநிதி. இதற்கு இடம் தரக் கூடாது. இதிலிருந்து முதல்வர் தப்பிக்க முடியாது.
தன் வினை தன்னைச் சுடும் என்பது போல கருணாநிதியும், அவரது குடும்பமும் தண்டனை பெறும் காலம் தொடங்கி விட்டது, இது தொடரும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications