கருணாநிதி ஒரு கலங்கரை விளக்கம்: சோம்நாத்
சென்னைசட்டமன்ற உறுப்பினர்களின் கலங்கரை விளக்கமாக முதல்வர் கருணாநிதி திகழ்கிறார் என்று லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியுள்ளார்.
கருணாநிதியின் சட்டசபை பொன்விழாவின் 2வது நாள் விழாவாக இன்று சட்டசபையில் சோம்நாத் சாட்டர்ஜி உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்ச்சியையும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் புறக்கணித்தார். மாறாக மு.க.அழகிரி தனது மகள், மருமகன், பேரன் ஆகியோருடன் தாயார் தயாளு அம்மாளுடன் அமர்ந்து தந்தையின் பாராட்டு விழாவைக் கண்டு களித்தார்.
நிகழ்ச்சியில் பேசுவற்கு முன்பு கருணாநிதியின் நூல் தொகுப்பினரை சோம்நாத் சாட்டர்ஜி வெளியிட்டார். கருணாநிதிக்கு நினைவுப் பரிசையும் அவர் அளித்தார்.
பின்னர் சோம்நாத் பேசுகையில், அரசியலில் உச்சத்திற்குச் சென்றபோதும் கூட வீதியில் உள்ள சாதாரண மக்களுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தவர், வைத்திருப்பவர் கருணாநிதி.
ஏழை, எளிய மக்களுக்காக இன்றும் கூட பாடுபட்டு வருபவர். அவரது வாழ்க்கை சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒளிமிகுந்த உதாரணமாக திகழ்கிறது.
ஏழை, எளிய மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொண்டு வருபவர் கருணாநிதி. அதிகாரப் பரவலை வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய வளர்ச்சிக் குழுவில் அவர் உரையாற்றியதை இன்றும் நான் நினைவு கூருகிறேன்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறார் கருணாநிதி. மக்கள் சேவையில் அவரது பணிகள் முன்னுதாரணமாக திகழ்கிறது.
கலைஞர் கருணாநிதி தமிழில் எழுதிய மார்க்ஸிமின் தாய் காவியத்தின் ஆங்கிலப் பதிப்புக்கு முன்னுரை எழுத கிடைத்த வாய்ப்பை நான் பெருமையாக கருதுகிறேன் என்றார் சோம்நாத்.
தமிழக தலைவர்கள் புகழாரம்:
முன்னதாக நேற்று சென்னையில் கருணாநிக்கு நடந்த பாராட்டு விழாவில் தேசிய மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் பாராட்டி புகழாரம் சூட்டினர்.
முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் பேசுகையில், மிகச் சிறந்த அறிவாற்றல் மிக்க தலைவராகவும், அரசியல்வாதியாகவும், மக்கள் தலைவராகவும், பல சிறப்புகளைக் கொண்டவர் கருணாநிதி.
தமிழகத்தின் நலனை மட்டுமன்றி, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காவும் பாடுபட்டவர் கருணாநிதி. அவர் நீடூழி வாழ வேண்டும் என்றார்.
மத்திய அமைச்சர் சரத் பவார் பேசுகையில், பொது வாழ்க்கையில் கருணாநிதி சந்தித்த கஷ்டங்கள் பல சவால்கள் பல. அத்தனையையும் தனது அரசியல் மற்றும் அறிவு முதிர்ச்சியால் திறம்பட சமாளித்தார். இந்திய அரசியலில் கருணாநிதி மிகவும் முக்கியமானவர். எல்லோராலும் மதிக்கத்தக்க தலைவர் என்றார்.
மார்க்சிஸ்டம் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேசுகையில், (முதலில் தமிழில் பேசிய காரத் பின்னர் ஆங்கிலத்தில் பேசினார்) நான் தமிழில் பேசுவேன். ஆனால் கலைஞர் முன் தமிழில் பேச பயமாக இருக்கிறது.
கலைஞரின் முதல் சேவை சமுதாய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்ததுதான். சமூக சீர்திருத்தத்தில் அவருக்கு அக்கறை அதிகம். அடுத்து ஜனநாயகத்தில் அவர் ஆற்றிய பங்கு. மாநில சுயாட்சிக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் அவர் பெரும் பணியாற்றியுள்ளார்.
84 வயதிலும் கடினமாக உழைக்கிறார், படிக்கிறார், எழுதுகிறார், ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் உழைக்கிறார் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் பேசுகையில், சமூக நீதிக்குப் பாடுபட்டவர் கருணாநிதி. மத்திய அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கியதில் முக்கிய இடம் வகித்தவர்.
நாட்டு முன்னேற்றத்திற்கான திட்டங்களை உருவாக்கியதில் சிற்பியாக திகழ்ந்தவர். சமூக நீதிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதற்காக குரல் கொடுக்கத் தயங்காதவர்.
இந்த ஆண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் போராட்டத்தின் 150வது பொன்விழாவைக் கொண்டாடி வரும் அதே வேளையில் முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழாவையும் கொண்டாடுவது சிறப்பானது என்றார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், இந்தியாவே திரண்டு வந்து கலைஞரைப் பாராட்டுகிறது. இதை தமிழக மக்களும், தமிழ் இனமும் மகிழ்ச்சியோடு வரவேற்கிரார்கள். தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்குகிறார் கருணாநிதி.
அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முன்னேற்றியிருக்கிறீர்கள். உலகத்தில் சாதனை படைத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் இல்லை, உலகத்தில் ஒருவர்.
அரசியல் வாழ்வில், சட்டமன்றப் பணிகளில் முத்திரைப் பதித்துள்ளீர்கள். உங்கள் வெற்றி மகுடத்தில் பல முத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான முத்துக்கள் உங்கள் வெற்றி மகுடத்தில் பதிக்கப்படவுள்ளன. நீங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அண்ணாவின் கொள்கைகளையும், அவர் விட்டுச் சென்ற கட்டளைகளையும் நிறைவேற்றி வருபவர் நீங்கள்.
அண்ணா கலைஞரிடம் சொன்னார், கண்ணீரில் மிதப்பவன் நான், நீ கண்ணீரில் மிதப்பவர்களை மீட்க வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து இன்றளவும் தமிழர்களின் வாழ்வுக்காக பாடுபட்டு வருகிறார் என்றார் ராமதாஸ்.
தி.க. தலைவர் கி.வீரமணி பாராட்டிப் பேசுகையில், 50 ஆண்டு சட்டமன்றப் பணிகள், 70 ஆண்டு பொது வாழ்வுப் பணிகளைக் கடந்த 84 வயது இளைஞராக இருக்கிறார் கருணாநிதி. நாங்கள் அவரை பாராட்ட வரவில்லை. மற்ற தலைவர்கள் எங்கள் தலைவரைப் பாராட்டுவதை கேட்க வந்திருக்கிறோம் என்றார்.
மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரும் கருணாநிதியை வாழ்த்திப் பேசினர்.
-
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications