காவிரியில் கர்நாடக புதிய அணை கட்டவில்லை- துரைமுருகன்
சென்னை:ஒகேனக்கல் அருகே காவிரியில் புதிய அணை எதுவும் கர்நாடக அரசு கட்டவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் துறைமுருகன் கூறியுள்ளார்.
காவிரி, பாலாறு குறித்து சட்டப்சபையில் காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அமைச்சர் துறைமுருகன் பேசியதாவது,
ஒகேனக்ல் பகுதியில் கர்நாடக அரசு அணை எதுவும் கட்டவில்லை. கொள்ளேகாலில் இருந்து பெங்களுரூ செல்லும் வழியில் கல் பாலம் உள்ளது. அதன் அருகில் பவர் ஹவுஸ் கட்டுகின்றனர். அங்கு பயன்படுத்தும் தண்ணீரை கீழே கொண்டு வர வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. அது அணை அல்ல.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு குறித்து தமிழகம் மேல் முறையீடு செய்துள்ளது. அதில் காவிரியில் இனி புதிய அணை கட்டினால் தமிழகத்தை கேட்க வேண்டும் என முறையீட்டையும் சேர்த்துள்ளோம்.
மேலும் பாலற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை வாங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தமிழகத்தின் உரிமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
நெய்யாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டுமானால் அதற்குரிய பணத்தை தர வேண்டும் என கேரள நீர் பாசனத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் கடிதம் எழுதியுள்ளார். பாசனத்திற்கு தரும் தண்ணீருக்கு பணம் கேட்பது ஆச்சரியம் அளிக்கிறது என அவர் கூறினார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications