ஐஏஎஸ் தேர்வு-தமிழகத்திலிருந்து 30 பேர் தேர்வு
சென்னை:ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஐ.ஆர்.எஸ். அதிகாரி பயிற்சியில் ஈடுபட்டிருந்தவரும் மீண்டும் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகியுள்ளார்.
2006ம் ஆண்டுக்கான 495 பணியிடங்களுக்கான முதல் நிலை சிவில் சர்வீஸ் தேர்வில் 1112 பேர் தேர்வு பெற்றனர். இவர்களில் 150 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் மே 4 வரை மெயின் தேர்வு நடந்தது.
இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தம் 474 பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். முட்டியால் ராஜ் ரேவு என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்திலிருந்து 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
30 பேரிலும் நந்தகுமார் என்பவர் முதலாவதாக வந்துள்ளார். இவர் தேசிய அளவில் 30வது ரேங்க் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐ.ஆர்.எஸ் ஆக தேர்வு பெற்றவர். அந்தப் பயிற்சியில் தற்போது ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் தேர்வு எழுதி இப்போது ஐஏஎஸ் ஆகி விட்டார்.
நந்தகுமார் உள்பட 12 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்கள் விவரம்
நந்தகுமார், அறிவழகன், டாக்டர் பாரதிதாசன், கூட்டுறவு துணைப் பதிவாளர் பெரியசாமி, ஐபிஎஸ் அதிகாரி ராஜலிங்கம், ஐபிஎஸ் அதிகாரி சுதாகர், தேவசேனா, ஏஞ்சலீன், ஹேமலதா, நோபல், கபீலா, சேவியர், ஜவகர், அனிதா, அருண் காந்த், சுந்தர்ராஜன், திருஞானசம்பந்தம், செந்தில் ஆவுடை கிருஷ்ணராஜ், பெரியசாமி, சரவணன், திகார் சிறை டிஎஸ்பி முருகன், டாக்டர் ஜஸ்டீன், டாக்டர் முத்துக்குமாரசாமி, டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications