பிளஸ் டூ: சமஸ்கிருதத்தை பாடமாக எடுத்ததால்முதலிடத்தை இழந்த மாணவி
திருச்சி:பிளஸ் டூ தேர்வில் சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்து படித்ததால் மாநிலத்திலே முதல் மாணவியாக வரும் வாய்ப்பை இழந்துள்ளார் திருச்சி மாணவி இந்து ரேகா. இவர் பெற்ற மதிப்பெண் 1,190.
சென்னை கோபாலபுரத்திலுள்ள டிஏவி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ரம்யா 1,182 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளார். இவரை விட 8 மதிப்பெண்கள் கூடுதலாக எடுத்துள்ளார் இந்து ரேகா.
![]() |
திருச்சி சாவித்திரி வித்யாசாலா ஹிந்து பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்த இந்து ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆனால், பிளஸ் டூவில் தமிழை முதன்மை பாடமாக எடுத்து படிக்கமால், சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக படித்ததால் மாநிலத்திலே முதல் மாணவி என்ற வாய்ப்பை இழந்துள்ளார்.
பட வாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்
சம்ஸ்கிருதம் 198
ஆங்கிலம் 193
இயற்பியல் 200
வேதியியல் 199
உயிரியல் 200
கணிதம் 200
மொத்தம் 1,190
இதுகுறித்து இந்து ரேகா கூறுகையில்,
மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் எடுத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது பெற்றோரும், ஆசிரியர்களும் என்னை ஊக்கவித்ததால் என்னால் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது.
அண்ணா பல்கலைக்கழுகம் அல்லது சென்னையில் சிறந்த கல்லூரிகளில் சேர்ந்து எனது மேற்படிப்பை தொடர விரும்புகிறோன் என்றார்.
இந்து ரேகா படித்த சாவித்திரி வித்யாசாலா ஹிந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பவர் அவரது தாயார் மலர்விழி என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications