தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்குஅதிமுக வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
மதுரை:மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே இங்கு கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதுரை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, வீரராகவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயக்குமார் சார்பில் அதிமுக எம்.பி. ஜோதி, வழக்கறிஞராக ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், அதை விசாரணைக்கு ஏற்றனர். பின்னர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி, மதுரை, நெல்லை சரக டிஐஜிக்கள், 9 மாவட்ட எஸ்.பிக்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications