வாஜ்பாயை ஜனாதிபதியாக்க மம்தா யோசனை
டெல்லி:முன்னாள் பிரதமர் வாஜ்பாயை ஜனாதிபதியாக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி யோதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிகாலம் வரும் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைவதால் அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி தலைவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் மம்தா பானர்ஜி கூறுகையில்,
அப்துல் கலாம் சிறப்பாக பணியாற்றி வருகிறார். மீண்டும் அவரையே ஜனாதிபதியாக்க வேண்டும். அவரை தேர்ந்தெடுக்க முடியாவிட்டால் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை ஜனாதிபதி ஆக்கவேண்டும்.
வாஜ்பாயின் அரசியல் வாழ்க்கை யாராலும் குறை கூற முடியாத அளவுக்கு உள்ளது. அவரை பெயரை சிபாரிசு செய்தால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அவரது நண்பர்கள் அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். வாஜ்பாய் மட்டுமே ஜனாதிபதி பதவிக்கு சிறந்தவர் என்றார்.
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டெல்லியில் பாஜக கூட்டணித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில் வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத் சிங், ஜார்ஜ் பெர்ணான்டஸ், மம்தா உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், இதில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிெவடுக்கும் அதிகாரம் வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.
காங்கிரஸ் தரப்பில் சுஷில்குமார் ஷிண்டேவையும் கம்யூனிஸ்ட் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியையும் ஜனாதிபதியாக முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந் நிலையில் வாஜ்பாயை ஜனாதிபதியாக்க பாஜகவும் முயல்கிறது. மம்தாவின் யோசனையை அத்வானியும் ஆதரிப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து வாஜ்பாய் விலகும் நிலை உருவாகும், தனது பாதை க்ளியர் ஆகும் என அத்வானி நினைக்கிறார்.
ஆனால், போட்டியிட்டால் வெற்றி உறுதியில்லாத நிலையில் அந்த விஷப் பரிட்சைக்கு வாஜ்பாய் தயாராக இல்லை என்று தெரிகிறது.
புதிய ஜனாதிபதி நியமிப்பதில் பாஜகவிற்கும் அதிக எம்எல்ஏக்களை வைத்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதிக்கும் முக்கிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. 9 மாநிலங்களில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது. அதனால் இவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும். ஆனால், அது மட்டுமே வெற்றிக்கு உதவாது. தனது கூட்டணி தவிர்த்த பிற கட்சிகளின் ஆதரவும் தேவைப்படும்.
மாயாவதியைப் பொறுத்தவரை சோனியாவுடன் அவருக்கு நட்புறவு உள்ளது. இதனால் சோனியா சொல்லும் வேட்பாளரை மாயாவதி ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications