அமெரிக்காவிலிருந்து சென்னை விரைகிறார் மல்லிகா மாறன்!!
சென்னை:அமெரிக்கா சென்றுள்ள முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன், கருணாநிதி குடும்பத்திற்கும், தயாநிதி, கலாநிதிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து சண்டையைத் தீர்த்து வைக்க நாளை சென்னை விரைகிறார்.
முரசொலி மாறனின் மகள் டாக்டர் அன்புக்கரசி அமெரிக்காவில் உள்ளார். அவர் தற்போது கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து அவரைக் கவனிப்பதற்காக மல்லிகா மாறன் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந் நிலையில்தான் தினகரன் கருத்துக் கணிப்பால் கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை தினகரன் அலுவலகத்தை அடித்து சூறையாடினர். இந்தக் குடும்பச் சண்டையில் அப்பாவிகள் 3 பேரின் உயிர்கள் பறிபோய் விட்டன.
இதன் தொடர்ச்சியாக தயாநிதி பதவியிழந்து நிற்கிறார்.
கருணாநிதியின் குடும்பத்திற்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்டு விட்ட இந்த பெரும் மோதலால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா மாறன், அமெரிக்காவிலிருந்தபடி தொலைபேசி மூலம் சமரசம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவரால் கருணாநிதி குடும்பத்தாருடன் பேச முடியவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து சென்னைக்குத் திரும்பி நேரடியாக கருணாநிதி மற்றும் குடும்பத்தினருடன் சமரசப் பேச்சில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும் தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சியையும் சென்னையில் நடத்த அவர் தீர்மானித்துள்ளார்.
வளைகாப்புக்குள் சமரசம் ஏற்பட்டால் கருணாநிதி குடும்பத்தினர் அதில் கலந்து கொள்ளக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications