மத்திய அமைச்சராகிறார் ராதிகா செல்வி-சரத்குமாருக்கு கருணாநிதி செக்
சென்னை:சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பியுமான ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அவர் பதவியேற்கிறார்.
மத்திய அமைச்சரைவயில் நேற்று முக்கிய மாற்றங்கள் நடந்தன. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பொறுப்பு ஏ.ராசாவுக்கு மாற்றப்பட்டது. அவர் வசம் இருந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையை பிரதமர் தன் வசம் வைத்துக் கொண்டார்.
உள்துறை இணை அமைச்சராக இருந்த ரகுபதி, வனத்துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டார்.
இதுதவிர புதிய இணை அமைச்சராக ராதிகா செல்வி நியமிக்கபப்ட்டுள்ளார். தயாநிதி மாறன் ராஜினாமாவில் குறைந்த ஒரு இடத்தில் ராதிகா செல்வி சேர்க்கப்பட்டுள்ளார். இணை அமைச்சராக அவர் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
![]() |
இவருக்கு எந்தத் துறை ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை.
கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கி, சென்னையில் போலீஸாரால் எண்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவிதான் ராதிகா செல்வி.
பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவரை அப்படியே திமுக இழுத்துக் கொண்டு திருச்செந்தூர் எம்.பி. தொகுதியில் நிறுத்தியது. ராதிகா வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் நாடார் சமுதாயத்தினரின் ஓட்டுக்களும் கணிசமாக திமுகவுக்குத் திரும்பியது.
ராதிகாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று நாடார் சமூகத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் திமுக தலைமை அதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. இதனால் நாடார் சமூகத்தினர் இடையே திமுக மீது அதிருப்தி நிலவி வந்தது.
இந்த அதிருப்தி அலையைப் பயன்படுத்தித்தான் சரத்குமார் புதிய கட்சி தொடங்குவதற்கான அடிப்படை வேலைகளில் மும்முரமாக உள்ளார். இந்த நிலையில்தான் சரத்குமாருக்கு செக் வைக்கும் விதமாக ராதிகா செல்விக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
கருணாநிதிக்கு பெருமை சேர்ப்பேன்: ராதிகா
இதற்கிடையில் முதல்வர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் மக்களுக்கு சேவை செய்வேன் என மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டள்ள ராதிகா செல்வி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இவ்வளவு பெரிய பதவி கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்தில்லை.
மத்திய அமைச்சர் பதிவிக்கு என்னை தேர்வு செய்த தலைவர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோன் என அவர் கூறினார்.
-
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ்













Click it and Unblock the Notifications