எச்1பி விசா: இந்திய ஐ.டி நிறுவனங்களுக்குஅமெரிக்க எம்.பிக்கள் நோட்டீஸ்
வாஷிங்டன்:இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எச்.1பி விசா முறையை தவறாகப் பயன்படுத்துவதாகவும், இதனால் தகுதி வாய்ந்த அமெரிக்கர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதாகவும் அமெரிக்க எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்ளுக்கு 2 எம்.பிக்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
குடியரசுக் கட்சியின் சார்லஸ் கிராஸ்லி மற்றும் ஜனநாயகக் கட்சியின் ரிச்சர்ட் டர்பின் ஆகிய இருவரும் இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, பட்னி, டெக்மகிந்திரா உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அந்த நோட்டீஸில், இந்திய ஐ.டி. நிறுவனங்கள் எச்1பி விசாவை பயன்படுத்தும் முறையால், தகுதி வாய்ந்த அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது.
உங்களது நிறுவனத்தில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்களை நியமிக்க எச்.ஒபி விசாவை பயன்படுத்துகிறீர்களா அல்லது அமெரிக்க வேலைகளை முழுமையாக அவுட்சோர்சிங் செய்ய எச்1பி விசாவை பயன்படுத்துகிறீர்களா என்பதை விளக்குமாறு அந்த எம்.பிக்கள் கேட்டுக் ெகாண்டுள்ளனர்.
மேலும், எச்1பி விசா நடைமுறையில் பல குளறுபடிகள் நடைபெறுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய நிறுவனங்களைத் தவிர வேறு சில நாடுகளின் ஐ.டி. நிறுவனங்களுக்கும் இந்த எம்.பிக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அமெரிக்க செனட் சபையில், குடியேற்ற சீரமைப்பு சட்ட மசோதா விவாதத்திற்கு வரவுள்ள நிலையில் அமெரிக்க எம்.பிக்கள் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தை குடியேற்றம் தொடர்பான பிரச்சினையாக தாங்கள் கருதவில்லை என்று நாஸ்காம் கூறியுள்ளது. அதேசமயம், இது சர்வதேச வியாபாரம் தொடர்பான பிரச்சினை என்று நாஸ்காம் கூறியுள்ளது.
வேலை பெர்மிட், நிறுவனங்களுக்கிடையிலான இடமாற்றம் ஆகியவற்றை குடியேற்றப் பிரச்சினையாக கருத முடியாது. மேலும், எச்1பி விசாவை கட்டுப்படுத்த முயன்றால் அது இந்திய ஐ.டி. நிறுவனங்களை மட்டுமல்லாமல், அமெரிக்க நிறுவனங்களுக்கும் பெரும் பிரச்சினைகளைக் கொடுக்கும்.
அமெரிக்காவில், திறமையாளர்களுக்கு ெபரும் பஞ்சம் நிலவுகிறது. அதை சரிக்கட்ட, போதுமான பணியாளர்களைப் பணியில் அமர்த்த எச்1பி விசா முறை வெகுவாக உதவியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் திறமையான தகவல் ெதாழில்நுட்ப நிபுணர்கள் அமெரிக்காவில் பணியில் அமர இது உதவுகிறது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்குத்தான் அதிக லாபம் கிடைத்துள்ளது.
போட்டிகள் நிறைந்த இந்த உலகில் புதுமையாகவும், வெற்றிகரமாகவும் செயல்பட இது உதவியுள்ளது என்பதை அமெரிக்க எம்.பிக்கள் புரிந்து ெகாள்ள முன்வர வேண்டும். இதை அமெரிக்க நிறுவனங்கள் விரைவில் புரிந்து ெகாள்ளும் என்றும் நாஸ்காம் கூறியுள்ளது.
அமெரிக்க எம்.பிக்களின் கடிதம் குறித்து இந்திய ஐ.டி. நிறுவனங்கள் பதில் அளிக்க மறுத்து விட்டன.
விப்ரோ நிறுவனம் இதுகுறித்துக் கூறுகையில், இப்ேபாது இதுகுறித்து கருத்து கூற முடியாது. எங்களுக்கு இதுபோன்ற கடிதம் எதுவும் வரவில்லை. நாஸ்காம் இதுகுறித்து கருத்து ெதரிவித்துள்ளது. எனவே நாங்கள் எதுவும் ெசால்ல விரும்பவில்லை என்று விப்ேரா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே எச்1பி விசாவுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் தகவல் ெதாழில்நுட்பப் பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக அமெரிக்க எலக்ட்ரானிக்ஸ் சங்கம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications