கமுதி: அனுமதியின்றி தேவர் சிலை வைப்பு-அகற்ற போலீஸ் முயற்சி- பெரும் பதற்றம்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அனுமதி பெறாமல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதை போலீஸார் அகற்ற முயன்றதால் சிலை வைத்தவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கமுதி அருகே உள்ள கழுத்தறுவான் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலையை வைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அவர்கள் அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை.
அனுமதி வாங்காமலேயே கிராமத்தினர் சிலை வைக்கும் பீடம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். இதை அறிந்த வருவாய்த் துறையினர் சிலை அமைக்க ஏற்பாடு செய்த பார்வார்டு பிளாக் வல்லரசு (போட்டி அணி) மாநில பொதுச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ராஜபாண்டியனையும், கிராம மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அதிகாரிகள் முடிவினை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து ராஜபாண்டியன் உள்பட 45 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கழுத்தறுவான் கிராமத்தினர் நேற்று முன் தினம் இரவோடு இரவாக தேவர் சிலையை அங்கு நிறுவி விட்டனர். இதையறிந்த கமுதி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். அனுமிதியின்றி சிலை வைத்ததாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் தேவர் சிலையையும் அவர்கள் அகற்ற முயன்றனர். இதற்கு அப் பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸாருடனும், அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் இறக்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந் நிலையில் கழுத்தறுவான் கிரமாத்தையடுத்துள்ள இடிவிலிகி, எருமைகுளம் ஆகிய கிராமங்களிலும் தேவர் சிலையை வைக்க அப் பகுதியினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் அங்கு வன்முறை மூளும் அபாயம் நிலவுவதால் ஆயுதம் ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications