விஜயகாந்த் மண்டபம் இடிப்பு பணி ஆரம்பம்-மிச்ச இடத்தில் புதிய கட்சி அலுவலகம்
சென்னைதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. மிச்ச சொச்சமாக கிடைக்கும் 3 கிரவுண்டு நிலத்தில் புதிய கட்சி அலுவலகத்தைக் கட்ட விஜயகாந்த் தீர்மானித்துள்ளார்.
விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் கோயம்பேடு நூறடி சாலையில், 1 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக இருந்தது. இந்த இடத்தை பாலம் கட்டத் தேவைப்படுவதாக கூறிய மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கைப்பற்றினர்.
நீதிமன்றங்களில் வழக்குகள் போட்டு மண்டபத்தை மீட்க முயன்றும் முடியாமல் போனதால் கல்யாண மண்டபத்தை அரசிடம் ஒப்படைத்து விட்டார் விஜயகாந்த்.
இதையடுத்து மண்டபத்தில் இடிபடும் பகுதியை நேற்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து குறியிட்டனர். நெடுஞ்சாலைத் துறை மேலாளர் ராவ், நில ஆர்ஜித தாசில்தார் சிதம்பரம் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்தன.
மொத்தம் உள்ள 1 ஏக்கர் நிலத்தில் 56 சென்ட் வரை மட்டுமே இடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீதம் உள்ள 3 கிரவுண்ட் நிலம் விஜயகாந்த்துக்கேக் கிடைக்கும்.
நேற்று இடிப்புப் பணி ஆரம்பமாகியது. இதையடுத்து தேமுதிகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி திரளாக கூடியிருந்து கோஷமிட்டனர். பின்னர் அவர்களில் சிலர் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களை விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.
பின்னர் சுதீஷ் கூறுகையில், மிச்சம் கிடைக்கும் இடத்தில் தேமுதிகவுக்கு அலுவலகம் கட்டப்படும். விரைவில் இதே இடத்தில் கட்சியின் தலைமைக் கழக அலுவலகம் செயல்படத் தொடங்கும் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications