உசிலம்பட்டி: குழந்தையைக் கொன்று வீட்டின்முன் புதைத்த தந்தை, பாட்டி கைது
மதுரை:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை பிறந்த உடனேயே கள்ளிப் பால் கொடுத்து கொன்று, உடலை வீட்டுக்கு முன்பாக புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாத குழந்தையின் தந்தை மற்றும் பாட்டியை போலீஸார் கைது செய்தனர்.
பெண் சிசுக் கொலைக்கு பெயர் போனது உசிலம்பட்டி. இந்த அவப் பெயர் சமீப காலமாக மாறி வந்தது. அரசின் தீவிர நடவடிக்கை, தன்னார்வ நிறுவனங்களின் தொடர் விழிப்புணர்வுப் பிரசாரம், காவல்துறையின் கண்காணிப்பு காரணமாக பெண் சிசுக்களைக் கொலை செய்வது குறையத் தொடங்கியது.
இருப்பினும் ஆங்காங்கே பெண் குழந்தைகள் கொல்லப்படுவது நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் பிறந்த உடனேயே பெண் சிசுவைக் கொன்று உடலை வீட்டுக்கு முன்பே புதைத்த கொடூரம் நடந்துள்ளது.
உசிலம்பட்டி அருகே உள்ள நரசிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு பூமிகா, மோனிகா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கர்ப்பமான செல்விக்கு 3வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.
3வதும் பெண்ணாக பிறந்ததால் அதிருப்தியுற்ற வடிவேல் தனது தாயார் ஒச்சம்மாளுடன் சேர்ந்து குழந்தையைக் கொல்ல முடிவு செய்தார். அதன்படி குழந்தைக்கு கள்ளிப்பாலை கொடுத்து கொலை செய்தனர். பின்னர் தங்களது வீட்டுக்கு முன்பு பள்ளம் தோண்டி அதில் சிசுவைப் போட்டு மூடி விட்டனர்.
தகவல் கிடைக்கப் பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறுதியில், வடிவேல், ஒச்சம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications