பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தர் திடீர்ராஜினாமா: அமைச்சரின் நெருக்கடி காரணமா?
திருச்சி:திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கமுத்து திடீரென ராஜினாமா செய்து விட்டார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் நெருக்குதலே இதற்குக் காரணம் என பேச்சு எழுந்துள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் சி.தங்கமுத்து. இவரது பதவிக்காலம் முடிய இன்னும் 22 நாட்கள்தான் உள்ளன. இந்த நிலையில் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் தங்கமுத்து.
![]() |
தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தங்கமுத்து கூறியுள்ளார். ஆனால் இதற்கு வேறு காரணம் கூறப்படுகிறது. புதன்கிழமை திருச்சிக்கு வந்திருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தனது அலுவலகம் திரும்பிய துணைவேந்தர் தங்கமுத்து மிகவும் அப்செட் ஆகிக் காணப்பட்டாராம். இந்த நிலையில்தான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து ஆளுநருக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார்.
பின்னர் பல்கலைக்கழகம் தனக்கு வழங்கிய செல்போனை பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்து விட்டு உடனடியாக சென்னைக்குக் கிளம்பிச் சென்றார் தங்கமுத்து.
அமைச்சர் பொன்முடிக்கும், தங்கமுத்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அமைச்சரின் பேச்சால் அதிருப்தி அடைந்தே தனது பதவியை தங்கமுத்து ராஜினாமா செய்து விட்டதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ













Click it and Unblock the Notifications