தொழிலதிபருக்கு ஷாக்: மின்வாரிய ஊழியர் கைது
சென்னை:தன்னைப் பற்றி லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர், முதியவரான தொழிலதிபரை மின்சார ஷாக் கொடுத்துக் கொல்ல முயன்று கைதாகியுள்ளார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாதமுனி (75). தொழிலதிபரான இவர் பூங்காநகர் பகுதியில் பிரமாண்ட வணிக வளாகம் கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு பெற தனது வீடு ஒன்றில் வாடகைக்குக் குடியிருந்து வரும் மின்வாரிய ஊழியர் ராம் மோகனை அணுகினார்.
மின் இணைப்பை விரைவில் பெற்றுத் தருவதாக கூறிய ராம் மோகன் இதற்காக நாதமுனியிடமிருந்து ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயைப் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி இணைப்பு வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதனால் கோபமடைந்த நாதமுனி, மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் கொடுத்தார். இதையடுத்து ராம் மோகனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
நாதமுனியின் செயலால் ஆத்திரமடைந்த ராம்மோகன் நேற்று நாதமுனியின் வீட்டுக்கு வந்தார். அப்போது நாதமுனி மட்டும் தனியாக இருந்தார். அவரை ஒரு சேரில் உட்கார வைத்து கை, காலை கட்டி விட்டு பின்னர் அவரது உடம்பில் மின்சார வயரைப் பொருத்தி ஷாக் கொடுத்துள்ளார்.
கதறித் துடித்த நாதமுனியிடம், என் மீதான புகாரை வாபஸ் வாங்கி விடு, இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நாதமுனி மயங்கி விடவே, பயந்துபோன ராம் மோகன் அங்கிருந்து ஓடி விட்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் நாதமுனியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராம்மோகன் கைது செய்யப்பட்டார்.
-
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
தவெக பதவியேற்று 15 நாளானால் என்ன? இப்போதைக்கு விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா அதிரடி! -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது! -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications