இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்
அபுதாபி:இலங்கை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 5 விக்கெட் வீழ்த்தி வெற்றி பெற்றதுள்ளது.
இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கு இடையே 3 ஒரு நாள் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
![]() |
இதன் முதல்போட்டி நேற்று அபுதாபியில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சளரான மகரூப் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.
அவருக்கு துணையாக விளையாடிய சமர சில்வா 47 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது.
236 ரன் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 137 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்தது.
பின்னர் அப்ரிடி, கமரன் அக்மல் இணை அதிரடியாக விளையாடியது மேலும் விக்கெட் விழாமல் ரன்களை குவித்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 239 ரன்கள் குவித்தது.
அப்ரிடி அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 73 ரன்ளும், கமரன் 51 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்கமால் இருந்தனர்.
அபாரமாக விளையாடிய அப்ரிடி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
பாகிஸ்தான் அணி உலககோப்பை கிரிக்கெட் போட்டி தோல்விக்கு பின் வெற்றி பெறும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே













Click it and Unblock the Notifications