கூரை போட்டு கட்சி ஆபீஸ்: விஜயகாந்த்
சென்னை:கல்யாண மண்டபத்தையும், கட்சி அலுவலகத்தையும் இடித்து விட்டதால் நான் கவலைப்படவில்லை. மிச்ச இடத்தில் கூரையைப் போட்டு கட்சி அலுவலகத்தை நடத்துவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தின் முக்கால்வாசிப் பகுதியை அரசு கையகப்படுத்தியுள்ளது. மண்டபத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. பாதி மண்டபத்தை இடித்து விட்டனர். இன்றைக்குள் முழுமையாக இடிக்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து விஜயகாந்த்திடம் கேட்டபோது, கல்யாண மண்டபத்தை பாலம் கட்டுப் பணிக்காக கையகப்படுத்தியுள்ளனர். அதற்காக கவலைப்படவில்லை. கையகப்படுத்தப்பட்ட நிலம் போக மீதமுள்ள இடத்தில் கூரையைப் போட்டு கட்சி அலுவலகத்தை நடத்துவேன் என்றார்.
ராஜ்யசபா தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி இதுதொடர்பாக முடிவெடுப்பேன் என்றார் விஜயகாந்த்.
தமிழகத்தில் தற்போது சபாநாயகரைத் தவிர்த்து மொத்தம் 233 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் மதுரை மேற்குத் தொகுதி காலியாக உள்ளதால், 232 பேர்தான் உள்ளனர்.
ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க குறைந்தது 34 பேரின் வாக்குகள் தேவை. தற்போது 6 எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். திமுக கூட்ணிக்கு 166 பேரின் ஆதரவு உள்ளது. அதிமுக கூட்டணியில் 66 பேர் உள்ளனர்.
திமுக கூட்டணிக்கு 4 பேரை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் ஐந்தாவதாக ஒரு எம்.பியை தேர்வு செய்ய வேண்டுமானால் விஜயகாந்த்தின் ஆதரவு தேவை. மேலும், எதிர் தரப்பிலிருந்து ஓரிரு எம்.எல்.ஏக்களின் ஆதரவை உருவ வேண்டும்.
அதேபோல, அதிமுக சார்பில் ஒருவரை உறுதியாக தேர்வு செய்து விடலாம். 2வது எம்.பியை தேர்வு செய்ய வேண்டுமானால் விஜயகாந்த் ஆதரவும், மேலும் ஒரு எம்.எல்.ஏவின் ஆதரவும் அவர்களுக்குத் தேவை.
எனவே விஜயகாந்த் ஆதரவு யாருக்குக் கிடைக்கப் போகிறது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications