ஹைதராபாத்: பலியானோர் எண்ணிக்கை 14 ஆனதுநகரில் பந்த்-இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஹைதராபாத்:நேற்று ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
ஹைதராபாத் சார்மினார் பகுதியில் உள்ள 400 வருடம் பழமையான மெக்கா மசூதியில் நேற்று ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை தொழுகைகாக குவிந்திருந்தபோது, பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 40 படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை ஓஸ்மேனி்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 5 உயிரிழந்தனர்.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார் வர தாமதமானதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து, போலீஸார் மீதும், அங்குள்ள கடைகள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இன்று முழு கதவடைப்பு:
இந்த வெடிகுண்டு சம்பவத்தை எதிர்த்து ஹைதராபாத் நகர் முழுவதும் இன்று முழுகதவடைப்பு நடத்தப்படுகிறது. அனைத்திந்திய முஸ்லீம் சங்கங்கள் இந்த முழு கதவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனால் நகர் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெறிசோடி கிடக்கின்றன. எனினும் மருத்துவமனை, காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருந்தன.
அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு பிரிவினரும், சிறப்பு காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மசூதிகள், கோவில்கள் என மத சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து இந்த சம்பவத்தை எதிர்த்து அமைதி பேரணி நடத்திவருகிறது. இதுவரை எந்தவிதமான வன்முறை சம்பவங்கள் நடந்ததாக தகவல் இல்லை.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications