போலி விசாவில் பாரீஸ் செல்ல முயன்ற11 இளைஞர்கள் சென்னையில் கைது
சென்னை:போலி விசாக்கள் மூலம் பாரீஸ் செல்ல முயன்ற 11 கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில், துபாய் செல்வதற்காக எமிரேட் விமானம் தயார் நிலையில் இருந்தது. பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை குடியுரிமைத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது 11 பேர் கும்பலாக அங்கு வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதற்கு அவர்கள் தாங்கள் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும், படப்பிடிப்புக்காக துபாய் வழியாக பாரீஸ் செல்லவுள்ளதாகவும் தெரிவித்தன.
இதனால் சந்தேகம் வலுத்த அதிகாரிகளின் அவர்களின் விசாக்களை சோதனை செய்தனர். அதில் அனைத்து விசாக்களும் போலியானவை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
ஜெகதீசன், முருகன், காசிராஜன், ராஜேஷ்கண்ணா, சுப்ராம், செல்லப்பன், மணிமாறன், கோவிந்தசாமி, தட்சிணாமூர்த்தி, வினாயகம், சங்கர் ஆகிய 11 பேரும் தேனி, விருதுநகர், திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சை, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அனைவரும் கம்ப்யூட்டர் என்ஜீனியரிங் படித்தவர்கள். படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்த இவர்களை மதுரையைச் சேர்ந்த ஆழ்வார் என்பவர் அணுகியுள்ளார்.
பாரீஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி இவர்களிடம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை பணத்தைப் பெற்றுள் சென்னைக்கு வந்துள்ளார். போலி விசாக்களை ஏற்பாடு செய்து இவர்களை விமான நிலையத்துக்கு அனுப்பியுள்ளார்.
விமான நிலையத்தில் யாராவது விசாரித்தால் ஷூட்டிங்குக்கு போகிறோம் என்று கூறுமாறு இவர்களிடம் தெரிவித்துள்ளார். அப்படிச் சொல்லித்தான் 11 பேரும் சிக்கிக் கொண்டு விட்டனர்.
இந்த வழக்கு தற்போது சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆழ்வாரை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications