கண்ணி வெடி-தாக்குதலில் 4 இலங்கை வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கையில் நடந்த வெவ்வேறு தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில்,
இன்று காலை விடுதலைப்புலிகளின் தலைமையிடமான முல்லைதீவு மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். விடுதலைப் புலிகளில் பலரும் படுகாயம் அடைந்தனர்.
இன்று காலை வவுனியா ஓமந்தை பகுதியில் சக்தி வாய்ந்த கண்ணி வெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
3 பேர் படுகாயத்துடன் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications