பாலாற்றில் அணை கூடாது: ரெட்டிக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை ஏற்க முடியாது. அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டிக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக ரெட்டிக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்
தமிழகத்தின் வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் குடிநீர்ப் பற்றாக்குறை மாவட்டங்கள் என்பதால் இந்த மாவட்டங்களில் வாழும் மக்களின் குடிநீர்த் தேவைக்கு பாலாற்று நீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை நீண்ட காலமாக நிலவுகிறது.
கல்பாக்கம் அணு மின் நிலையமும் அதைச் சுற்றியுள்ள நகரியமும் பாலாற்று நீரையே சார்ந்திருக்கின்றன. எனவே பாலாற்றைக் குறுக்கிட்டு அணை கட்டுவதென்பது தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மிகப் பெருமளவுக்கு குடிநீர் பிரச்சினையை உருவாக்கி விடும்.
1892ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மெட்ராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில், பாலாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டுமானால், தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படுமானால், அது 1892ம் ஆண்டு ஒப்பந்தத்தில், குறிப்பிடப்பட்டுள்ள உரிமையை பெரிதும் பாதிக்கும்.
எனவே கணேசபுரத்தில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள அணையை தமிழக அரசு எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications