புலி முகாம் மீது இலங்கை விமானங்கள் குண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீது போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
ராணுவ செய்தி தொடர்பாளர் சமரசிங்கே கூறுகையில்,
மாங்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீது இன்று விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் வெற்றிகாரமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலுக்கு எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரபூர்வமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
அதேபோல இலங்கை கடற்படையினர் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஒரு விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஒரு படகை கைப்பற்றியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications