சன் டிவி பங்குகள் கடும் வீழ்ச்சி
மும்பை:முதல்வர் கருணாநிதி குடும்பத்திலிருந்து தயாநிதி மாறன் தூக்கி எறியப்பட்டு விட்டதால், சன் டிவியின் பங்குகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியை திமுக பறித்தது. மேலும் சன் டிவிக்கும், திமுகவுக்கும் இடையிலான தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது.
இதன் எதிரொலியாக சன் டிவியின் பங்குகள் கடும் விலை வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக திமுக சார்பில் புதிய டிவி தொடங்கப்படவுள்ளாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து சன் டிவியின் பங்கு கடும் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 93 ரூபாய் வரை பங்கு விலை குறைந்துள்ளது. மும்பைப் பங்குச் சந்தையில் இன்று காலை சன் டிவி பங்குகளின் விலை ரூ. 1460 ஆக இருந்தது. பிற்பகல் 12 மணியளவில் இது 93 ரூபாய் குறைந்து ரூ. 1367 ஆக வீழ்ச்சியை சந்தித்தது.
இன்று பெரும் நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்களில் சன் டிவி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று மாலைக்குள் சன் டிவியின் பங்கு மதிப்பு மேலும் சரியும் என பங்கு சந்தை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications