லாரி மோதியதால் ஆம்னி பஸ்சின் அடியில்கார் சிக்கி விபத்து - 7 பேர் பலி
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 7 பேர் உடல் கருகி இறந்தனர்.
சென்னையிலிருந்து சிவகாசிக்கு நேற்று இரவு ஒரு ஆம்னி பேருந்து கிளம்பியது. பேருந்து செங்கல்பட்டு அருகே பாலாற்றுப் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் டிரைவர் பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தினார்.
![]() |
அப்போது பேருந்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த காரும் பிரேக் போட்டு நின்றது. அந்த சமயத்தில், காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று வேகமாக வந்து பிரேக் போட்டு நின்றது. அப்போது, கார் மீது அந்த லாரி மோதியது.
இதனால் கார் நிலைதடுமாறி பேருந்தின் அடியில் போய் சிக்கிக் கொண்டது. மேலும் மோதிய வேகத்தில் காரில் தீப்பிடித்துக் கொண்டது.
குபுகுபுவென புகையுடன் காரில் ஏற்பட்ட தீ பேருந்திலும் பற்றிக் கொண்டது. இதைப் பார்த்த பேருந்தின் டிரைவர் பேருந்தில் இருந்த பயணிகளை வேகமாக கீழிறக்கினார். சிறிது நேரத்தில் பேருந்தும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பேருந்தில் சிக்கிக் கொண்ட கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த 7 பேரும் தப்பி வர முடியாமல் பரிதாபமாக காருக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர்.
சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சேந்தமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த நிர்மல்ராஜ், அன்பரசு உள்ளிட்டோர்தான் காரில் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் சுற்றுலாவாக காரில் கிளம்பியுள்ளனர்.
எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தால், பேருந்தும், காரும் முற்றிலும் எரிந்து நாசமானது. விபத்துக்குக் காரணமான லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
சம்பவம் குறித்து அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர்.
விபத்து காரணமாக சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா













Click it and Unblock the Notifications