ஏவி.எம். பேரனுக்கு புலிகள் பெயரில் மிரட்டல்
காரைக்குடி:மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் கொள்ளுப் பேரனுக்கு விடுதலைப் புலிகள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
ஏவி.எம்மின் கொள்ளுப் பேரன் பழனியப்பன். இவர் காரைக்குடி சூடாமணி புரத்தில் வசித்து வருகிறார். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் பழனியப்பன்.
2 நாட்களுக்கு முன்பு பழனியப்பன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், உங்களுக்கு ஒரு தபால் வரும் அதைப் பிரித்துப் பார், நான் காரைக்குடி முத்துப்பட்டணத்திலிருந்து பேசுகிறேன் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
அதன்படி தனக்கு வந்த தபாலை பிரித்துப் பார்த்தார் பழனியப்பன். அந்தத் தபால் தேவகோட்டையிலிருந்து வந்தது. அதில், இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டியதுள்ளது. எனவே நாங்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டைக் குண்டு வைத்துத் தகர்த்து விடுவோம், இவண் விடுதலைப் புலிகள் என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
பின்னர் மீண்டும் அந்தப் பெண் பழனியப்பனைத் தொடர்பு கொண்டு, கடிதம் கிடைத்த 78 மணி நேரத்திற்குள் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார் பழனியப்பன். போலீஸார் விரைந்து சென்று பழனியப்பன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்தனர் ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
தற்போது பழனியப்பனின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் வீட்டைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications