என்ஜின் பழுது: நடு வழியில் நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ்
உளுந்தூர்பேட்டை:சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குக் கிளம்பிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் பழுதானதால், நடு வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னையிலிருந்து நேற்று மாலை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. உளுந்தூர்ப்பேட்டை அருகே ரயில் சென்றபோது அதன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரயில் நடு வழியில் நின்றது.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். குறிப்பாக பெண் பயணிள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
திருச்சியிலிருந்து வந்த மீட்பு என்ஜின், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பழுதை சரி பார்த்தது. இன்று அதிகாலை 5.30 மணிக்குத்தான் பழுது சரியானது. இதையடுத்து ரயில் நெல்லை கிளம்பிச் சென்றது.
இந்த கோளாறு காரணமாக இன்று காலை 8.20 மணிக்கு நெல்லை போய்ச் சேர வேண்டிய ரயில் பிற்பகல் 2.30 மணிக்குத்தான் நெல்லை போய்ச் சேரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
