அப்துல் கலாமைக் கைவிட்டது பாஜக;மீண்டும் பதவி கிடையாது - வாஜ்பாய்
டெல்லி:குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இது அவருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டு விட்டது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
அப்துல் கலாமின் குடியரசுத் தலைவர் பதவி முடிக்கு வருகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதை அறிய நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளனர். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.
ஆரம்பத்தில் அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க பல கட்சிகள் விருப்பம் கொண்டிருந்தன. ஆனால் முக்கிய கட்சிகள் சில வேறு வேட்பாளர் குறித்து பேச ஆரம்பிக்கவே இந்த கட்சிகளும் இப்போது கலாமை கை கழுவி விட்டன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்னிறுத்தப்படவுள்ளார். இடது சாரிக் கட்சிகளும் இவரையே ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை உறுதியான பெயர் எதுவும் எழவில்லை.
இந்த நிலையில் அப்துல் கலாமுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அப்துல் கலாமுக்கு மீண்டும் பதவி கிடைக்காது. அதை அவரிடம் முறைப்படி தெரிவித்து விட்டோம்.
கருத்தொற்றுமையுடன் புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். கருத்து வேறுபாடுகள் எப்போதும் உண்டு. அப்துல் கலாம் தேர்வு செய்யப்பட்டபோதும் கூட கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன என்றார் வாஜ்பாய்.
உ.பியில் ஆட்சியைப் பிடித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவும் முக்கியமாக தேவை. எனவே அவரது ஆதரவைப் பெற காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதேபோல பாஜகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவைப் பெற்ற தனது வேட்பாளரை நிறுத்த தீர்மானித்துள்ளது.
தற்போதைய நிலையில் பிரணாப் முகர்ஜி, டாக்டர் கரண் சிங், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் முன்னணியில் உள்ளன.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications