மாண்ட ஆண்டவர் பிணவறையில் மீண்டார்!
தேனி:இறந்து விட்டதாக கூறி பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் திடீரென எழுந்து உட்கார்ந்ததால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டப்பன்பேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டவர். கூலித் தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் விஷம் குடித்து விட்டார் ஆண்டவர்.
உடனடியாக அவரை தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆண்டவர் இறந்து விட்டதாக கூறினர்.
அவரது உடல் ஸ்டிரெச்சரில் வைக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு ஓரமாக வைத்திருந்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் உடல் தரப்படும் என டாக்டர்கள் கூறினர்.
இந்த நிலையில் கேரள மாநிலம் சாந்தம்பாறையைச் சேர்ந்த ஆண்டவர் என்ற பெயர் கொண்ட இன்னொரு நபரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இந்த நிலையில், கூட்டப்பன்பேரி ஆண்டவரின் உடலை ஊழியர்கள் பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மயக்கத்தில் இருந்த ஆண்டவர் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.
பின்னர் டாக்டர்கள் வந்து பார்த்து ஆண்டவர் நலமடைந்து விட்டதை உறுதி செய்து பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அட, ஆண்டவா!
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications