வன்முறையை முடிவுக்கு கொண்டு வரஇலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
வாஷிங்டன்:இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சண்டையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் அருகே நெடுந்தீவு கடற்படை முகாமில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 35 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் கேஸி இதுகுறித்துக் கூறுகையில்,
அமைதியாகவும், ஜனநாயக பூர்வமாகவும் வாழ இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் தொடரும் வன்முறையால் இந்த உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கை துணை வெளியுறவு அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் இலங்கை சென்று அங்கு அரசு நிர்வாகத்துடன் பேச்சு நடத்தினார். அப்போது வன்முறைக்கு விரைவில் முடிவு கட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து, சம உரிமைகளுடன் அமைதியான சூழலில் வாழ வழி செய்யப்பட வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தினார்.
இலங்கையில் அமைதி நிலவச் செய்ய முயற்சித்து வரும் இலங்கை அரசு, நார்வே அமைதிக் குழுவுடன் இணைந்து அமெரிக்காவும் அமைதி ஏற்பட முயற்சிக்கும் என்றார் கேஸி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications