ராமேஸ்வரம் கடலில் போர்க் கப்பல்கள் ரோந்து
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடல் படையின் 6 போர்க் கப்பல்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் புலிகளுக்கு விமான பலமும் கூடியுள்ளது. இதையடுத்து இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் பல்வேறு வகையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 12 மீனவர்கள் கடத்தப்பட்டதற்கும் விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று கூறப்பட்டதால் கடல் பகுதி கண்காணிப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 6 அதி நவீன போர்க் கப்பல்கள் ராமேஸ்வரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஆள் இல்லாத உளவு விமானங்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
24 மணி நேரமும் இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறது. 6 போர்க் கப்பல்களிலும் 500 கடற்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரோந்துப் பணி குறித்து டெல்லியில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கும், விசாகப்பட்டனத்தில் உள்ள பிராந்திய அலுவலகத்திற்கும் அதிகாரிகள் அவ்வப்போது அறிக்கை அனுப்பி வருகின்றனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications