அருணாச்சல பிரதேசத்தில் சீனா குசும்பு!
டெல்லி :அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியை சீன நாட்டு அதிகாரி என்று கூறி அவருக்கு சீனா வர விசா தேவையில்லை என்று சீன தூதரகம் குசும்புத்தனமாக கூறியதால் இந்தியா கோபமடைந்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை சீனா ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளது. மேலும் அந்த மாநிலத்தையே சீனாவின் ஒரு பகுதி எனவும் சமீப காலமாக கூறத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 107 ஐஏஎஸ் அதிகாரிகளை பயிற்சிக்காக சீனாவுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. இவர்களில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம்.
இவர்களுக்கு விசா வழங்குமாறு கோரி சீனத் தூதரகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்த சீன தூதரகம், அருணாச்சலப் பிரதேச அதிகாரியைத் தவிர மற்றவர்களுக்கு விசா வழங்கியது.
ஒருவருக்கு மட்டும் ஏன் வழங்கவில்லை என்று மத்திய அரசின் சார்பில் கேட்டபோது அவர் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அருணாச்சலப் பிரதேசம் சீனாவைச் சேர்ந்தது. சீனர் ஒருவருக்கு சீனாவுக்கு வர விசா தேவையில்லை என்று குசும்புத்தனமாக பதிலளித்துள்ளாம் சீன தூதரகம்.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் போக்கைக் கண்டிக்கும் வகையில் 107 அதிகாரிகளின் சீன பயணத்தையும் ரத்து செய்து விட்டது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications