மதுரை மேற்கில் காங். வெல்லும்-கிருஷ்ணசாமி
சென்னை:மதுரை மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில்,
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரையும், மதுரை மேற்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பெயரையும் கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்கும்.
மதுரைக்கு விரைவில் நானும், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனமும் செல்லவுள்ளோம். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளரின் பெயரை கட்சி மேலிடத்துக்குப் பரிந்துரை செய்வோம். பின்னர் வேட்பாளரின் பெயரை கட்சி அறிவிக்கும்.
மதுரை மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். அங்கு காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார் கிருஷ்ணசாமி.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications