கணவரின் காதல்.. திருமணத்தன்றேதாலியைக் கழற்றி வீசிய பெண்
சென்னை:கல்யாணம் செய்து கொண்ட பின்னர் தனது கணவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அந்தப் பெண்ணை அவர் கர்ப்பிணியாக்கியதும் தெரிய வந்ததால் தாலியைக் கழற்றி வீசி விட்டுச் சென்றார் சென்னைப் பெண்.
சென்னை அருகே உள்ள திருநீர்மலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். கூலி வேலை பார்த்து வந்த அவருக்கும் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த கனகவல்லி என்ற பெண்ணுக்கும், நேற்று காலை திருநீர்மலை கோவிலில் கல்யாணம் நடந்தது.
கல்யாணம் ஆன சில நிமிடங்களில் லட்சுமி என்ற பெண் போலீஸ் புடை சூழ அங்கு வந்தார். இதனால் கல்யாண சந்தோஷத்தில் இருந்த இரு வீட்டாருக்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
![]() |
போலீஸாருடன் வந்த லட்சுமி, சீனிவாசன் வீட்டுக்கு அருகே வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணமாகி விட்டது. இவரது கணவர் பெயர் ராஜு. இவர் சீட்டுக்குப் பணம் பிடித்து மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் லட்சுமி தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கும், சீனிவாசனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கல்யாணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி லட்சுமியை சந்தித்து சந்தோஷமாக இருந்து வந்துள்ளார் சீனிவாசன். இதில் லட்சுமி கர்ப்பமாகி விட்டார்.
இந்த நிலையில் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்திற்கு அவர் சென்றிருந்தார். இந்த நிலையில்தான் சீனிவாசனுக்கும், கனகவல்லிக்கும் கல்யாணம் நிச்சயமானது லட்சுமிக்குத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்ற அவர் அங்கு புகார் கொடுத்தார். போலீஸார் லட்சுமியை அழைத்துக் கொண்டு திருநீர்மலை வந்தனர். ஆனால் அதற்குள் சீனிவாசன், கனகவல்லி கல்யாணம் முடிந்து விட்டது.
![]() |
பெண் வீட்டார், சீனிவாசன் குடும்பத்தார், லட்சுமியுடன் காவல் நிலையத்தில் போலீஸார் பஞ்சாயத்து கூட்டினர். சீனிவாசன் என்னை எனது வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நான் வேலைக்குப் போய் சாப்பாட்டு போட்டு வந்தேன். என்னுடன் அவர் பலமுறை உடலுறவு கொண்டார். கணவன், மனைவியாகத்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என்றார் லட்சுமி.
சீனிவாசனோ, நான் பழகியது உண்மை. ஆனால் அவருடன் உறவெல்லாம் வைத்துக் கொண்டதில்லை. வேறு சிலருடன் அவருக்கு உறவு உள்ளது. அதில்தான் அவர் கர்ப்பமாகியுள்ளார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட போலீஸார் உனது கணவர் திரும்பி வந்தால் என்ன செய்வாய் என்று லட்சுமியிடம் கேட்டபோது,
அவர் எங்கு இனி வரப் போகிறார். நான் சீனிவாசனுடன்தான் வாழ்வேன் என்றார். இந்த சமயத்தில், தான் லட்சுமியிடம் பழகியதையும், உறவு வைத்துக் கொண்டதையும் ஒத்துக் கொண்டார் சீனிவாசன்.
இந்த வாதப் பிரதிவாதங்களை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த கனகவல்லி, இதற்கு மேலும் சீனிவாசனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்து அதை போலீஸாரிடம் தெரிவித்தார்.
தாலியைக் கழற்றி போலீஸாரிடம் கொடுத்த கனகவல்லி, ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டு என்னைக் கல்யாணம செய்து கொண்ட இவருடன் வாழ முடியாது, அவர் எப்படியும் போகட்டும், என்னை விட்டு விடுங்கள் என்று கூறி விட்டு தனது உறவினர்களுடன் காவல் நிலையத்திலிருந்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து சீனிவாசனிடம் திரும்பிய போலீஸார் என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டனர். அதற்கு சீனிவாசன், லட்சுமியுடன் குடும்பம் நடத்துவதாக கூறினார். இதையடுத்து அதை ஒழுங்காக செய் என்று சீனிவாசனை அட்வைஸ் கலந்த எச்சரிக்கையுடன் அங்கிருந்து லட்சுமியுடன் அனுப்பி வைத்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்














Click it and Unblock the Notifications