திருநள்ளாறு சனீஸ்வரன் பகவான் தேரோட்டம்

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்: காரைக்காலிலுள்ள சனீஸ்வரன் கோவில் தோரேட்டத் திருவிழா நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 9ம் தேதி முதல் சனீஸ்வரன் பகவான் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

நேற்று காலை இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

இதில் செண்பகத்தியாகராஜ சுவாமி மற்றும் பிராணாம்பிகை அம்பாள் தனித்தனி தேர்களில் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தனர்.

பின்னர் தேர்கள் நிலையத்திற்கு வந்தடைந்தன.

நேற்று இரவு தேர் எண்ணைக்கால் மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று இரவு எண்ணைக்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுத்தருளல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வரன் பகவான் சகோதர வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறும்

நாளை அதிகாலை 4 மணிக்கு இடையன்காட்சிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும். இரவில் தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+