சோனியாவை சந்தித்தார் கருணாநிதி:அன்பழகன் துணை ஜனாதிபதியாவாரா?
டெல்லி:காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் முதல்வர் கருணாநிதி சந்தித்து பேசினார்.
டெல்லியில் நாளை நடைபெறவுள்ள தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் ராஜா ஆகியோரும் சென்றனர்.
டெல்லி விமான நிலையத்தில் கருணாநிதியை திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம், ரகுபதி, ராதிகா செல்வி, வேங்கடபதி ஆகியோர் வரவேற்றனர்.
அதன் பின்னர் விமான நிலையத்தில் பத்திரிக்கை நிருபர்களுக்கு கருணாநிதி போட்டியளித்தார். அதன் பின்னர் தமிழ்நாடு இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு கருணாநிதியை மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் சந்தித்து பேசினார்.
இச் சந்திப்பின் போது குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதித்தனர். அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் மற்றும் கே.வரதராஜன் இருவரும் தமிழ்நாடு இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து பேசினர்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சென்று கருணாநிதி சந்தித்தார்.
அப்போது குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இதில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு அமைச்சர் அன்பழகனை நிறுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதன் பின் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது,
குடியரசுத் தலைவர் தேர்வு குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களிடம் பேசினேன். இது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தொடர்ந்து நாங்கள் பேச்சு நடத்துவோம். இதற்காக நான் மீண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெல்லிக்கு வருவேன்.
அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை நிறுத்துவது என முடிவு செய்யப்படும். மேலும் நதிகள் இணைப்பு குறித்து சோனியா காந்தியுடம் ஆலோசித்தேன். ஜூன் முதல் வாரம் டெல்லி வரும் போது இதுகுறித்து விரிவாக சொல்கிறேன் என்றார்.
இன்று மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கை சந்திக்கும் கருணாநிதி இரவில் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசுகிறார்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் ஏ.பி.பர்தானும் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து நாளை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று தமிழகத் திட்டங்கள் குறித்து பேசுகிறார்.
அதே போல உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் விபி சிங்கையும் கருணாநிதி சந்திக்கவுள்ளார்.
நாளையே தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு கருணாநிதி சென்னை திரும்புகிறார்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications