மாறன் மகள் வளைகாப்பு: கருணாநிதி குடும்பம்புறக்கணிப்பு
சென்னை:மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகள் டாக்டர் அன்புக்கரசியின் வளைகாப்பு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.
மதுரை தினகரன் நாளிதழ் மீதான தாக்குதலுக்குப் பிறகு கருணாநிதி குடும்பமும், மாறன் குடும்பமும் பிளவுபட்டு நிற்கிறது. மாறன் குடும்பத்தை கருணாநிதி குடும்பம் முற்றிலும் புறக்கணித்துள்ளது. அதேபோல சன் டிவிக்கும், திமுகவுக்கும் இடையிலான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. சன்னுக்குப் போட்டியாக திமுக சார்பில் கலைஞர் டிவி தொடங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் இரு குடும்பத்திற்கும் இடையே சமரசம் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. கடைசி முயற்சியாக மாறனின் மகள் டாக்டர் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சி கருதப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் எப்படியாவது கருணாநிதி குடும்பத்தினரை கலந்து கொள்ள வைக்க மாறன் குடும்பத்துத் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கருணாநிதி, மாறன் குடும்பங்களுக்கு இடையே சமரசம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், அன்புக்கரசியின் வளைகாப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியை கருணாநிதி குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.
முதல்வர் கருணாநிதி தனது மனைவி தயாளு அம்மாளுடன் இன்று காலையிலேயே டெல்லிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார். அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை பக்கம் சுற்றுப்பயணத்தில் உள்ளார். மற்றவர்கள் யாரும் வளைகாப்புக்குப் போகவில்லை.
இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் மூத்த மகள் செல்வி, அவரது கணவர் முரசொலி செல்வம் (இவர் முரசொலி மாறனின் சகோதரர்) ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
மாறன் குடும்பத்து நிகழ்ச்சியை கருணாநிதி குடும்பத்தினர் புறக்கணித்ததன் மூலம் கடைசி சமரச முயற்சியும் தோல்வி அடைந்து விட்டதாக கருதப்படுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications