ஹெல்மெட்- பெண்களுக்கு விதிவிலக்கு கோரும் ராமதாஸ்
சென்னை: இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்,
ஜூன் மாதம் முதல் மாநாகராட்சிகளிலும், ஜூலை முதல் மற்ற பகுதியிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் நலனை கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
ஆனால் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு இந்த நிபந்தனை தளர்த்தப்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர், முக்கியமாக தாய்மார்களிடமிருந்து இந்த கோரிக்கை எழுந்துள்ளது.
திடீரென ஏற்படும் அவசர வேலைகள் காரணமாக இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுபவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனை சாத்தியமல்ல. தாய்மார்களுக்கும் இந்த நிலைமை ஏற்படுகிறது.
இந்திய தலைநகர் டெல்லியில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என பல வருடங்களாக நடைமுறையில் இருந்தாலும், சீக்கிய மக்களுக்கும், பின்னால் அமரும் பெண்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று தமிழகத்திலும் விதிவிலக்கு அளிக்கலாம்.
இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமரும் ஆண்கள் ஹெல்மெட் அணிவதா, வேண்டாமா என்பதை அவர்கள் விருப்பதிற்கு விட்டுவிடலாம். உயிர்மீது ஆசையில்லாதவர்கள் யாருமில்லை.
எனவே இருசக்கர வாகனங்களில் அமர்ந்து செல்லும் பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கும், ஆண்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கும் விட்டுவிடவேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கவேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications