திமுகவில் சேரும் ராஜ் டிவி சகோதரர்கள்
சென்னை:ராஜ் டிவி நிறுவன சகோதரர்கள் விரைவில் திமுகவில் சேரவுள்ளனர்.
மதுரையில் அழகிரி ஆதரவாளர்களால் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி அரங்கிலும் பல பரபரப்பு நிகழ்வுகள் அரங்கேறியவண்ணம் உள்ளன.
சன் டிவியின் கடும் போட்டியாளராக கருதப்பட்ட ராஜ் டிவியை, தயாநிதி மாறன் தனது அரசியல் மற்றும் அதிகார பலத்தால் நசுக்கி ஒடுக்கி வந்தார். இந்த நிலையில்தான் மதுரையில் நடந்த கடும் வன்முறைக்குப் பின்னர் தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியைப் பறிக்க திமுக முடிவு செய்தது. அவரும் ராஜினாமா செய்தார்.
மதுரை சம்பவத்திற்குப் பின்னர் திமுகவுக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையிலான உறவு முற்றிலும் முறிந்து போயுள்ளது. திமுகவின் ஆதரவு தொலைக்காட்சியாக இருந்து வந்த சன் டிவி இப்போது ஓரம் கட்டப்பட்டு விட்டது.
இதையடுத்து திடீரென திமுக ஆதரவு டிவியாக ராஜ் டிவி மாறியுள்ளது. திமுகவுக்கென தனியாக கலைஞர் டிவியும் வரப் போகிறது.
இந்த நிலையில், ராஜ் டிவி நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் திமுகவில் சேரத் திட்டமிட்டுள்ளார். முன்பு ராஜ் டிவிக்கு தயாநிதியால் நெருக்கடி வந்தபோது பாஜகவில் சேர்ந்தார் ராஜேந்திரன். ஆனால் அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் திமுக தரப்பிலிருந்து தங்கள் மீது ஆதரவுப் பார்வை படத் தொடங்கியுள்ளதால் திமுகவில் சேர முடிவு செய்துள்ளார் ராஜேந்திரன். ஜூன் 1ம் தேதி அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ராஜேந்திரனும், அவரது சகோதரர்கள் ராஜரத்தினம், ரவீந்திரன், ரகுநாதன் ஆகியோரும் திமுகவில் இணையவுள்ளனர்.
இது சந்தர்ப்பவாத செயலாக கூறப்படுகிறதே என்று ராஜேந்திரனிடம் கேட்டபோது,
நிச்சயம் இல்லை. நான் திமுக காரனாகத்தான் பிறந்தேன், திமுககாரனாகத்தான் இறப்பேன் (இதே வார்த்தையத்தான் சில நாட்களுக்கு முன்பு தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் கூறினார்)
எனது தந்தை மாணிக்கம் பிள்ளை திமுககாரர். எனது மாமனாரும் திமுககாரர். முன்னாள் அமைச்சர் மாதவன் எனது உறவினர். எனது குடும்பமே திமுக குடும்பம்தான். எனவே நானும், எனது சகோதரர்களும் திமுகவில் சேருவது சந்தர்ப்பவாத செயல் அல்ல என்றார் ராஜேந்திரன்.
ராஜேந்திரன் திமுகவில் சேர முடிவு செய்துள்ளதால் சன் டிவியின் இடத்திற்கு அதிகாரப்பூர்வமாக ராஜ் டிவி வந்து விட்டது. மேலும் ராஜ் டிவி உதவியோடு வரப் போகும் போனஸாக கலைஞர் டிவியும் திமுகவுக்கு ஆதரவாக களம் இறங்குகிறது.
அடுத்தடுத்த இந்த நிகழ்வுகளை மாறன் சகோதரர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதே இப்போதைக்கு அனைவரின் எதிர்பார்ப்பும்.
-
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம்












Click it and Unblock the Notifications